SBI provided election bond details

தேர்தல் பத்திர விவரங்களை வழங்கிய எஸ்.பி.ஐ : உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?

அரசியல் இந்தியா

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் இன்று (மார்ச் 12) வழங்கியுள்ளது.

மத்திய அரசு 2017ஆம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் 2018ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், “தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும்” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அதோடு, “ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தையும் வாங்கிய தேதி, பத்திரத்தை வாங்கியவரின் பெயர் மற்றும் தேர்தல் பத்திரத்தின் மதிப்பு ஆகிய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரியது எஸ்பிஐ.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 12ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (மார்ச் 12) மாலை தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது எஸ்பிஐ. SBI provided election bond details

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தங்களிடம் வழங்கியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் தேர்தல் ஆணையம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Image

ஆனால் எஸ்பிஐ வங்கி அனுப்பிய தரவு எல்லாம் தொகுக்கப்படாமல் ’ரா ஃபார்மெட்டில்’ இருப்பதாகவும், இதனால் மார்ச் 15ஆம் தேதிக்குள் அனைத்து தரவுகளையும் இணையத்தில் பதிவேற்றுவது சவாலாக இருக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 15ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் பதிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

SK : விஜய் இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்?

கொடநாடு வழக்கை விசாரித்த ஐஜி பணியிடமாற்றம்!

“நள்ளிரவே அண்ணாமலையை எழுப்பிய சரத்குமார்” – நடந்தது என்ன?

Dhruv Vikram படத்தில் இணைந்த ‘பிரேமம்’ ஹீரோயின்

SBI provided election bond details

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *