மத்தியக்குழு ஆய்வு! top ten news today in Tamil December 20 2023
தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு இன்று (டிசம்பர் 20) ஆய்வு செய்கிறது.
சாகித்ய அகாடமி விருதுகள்!
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்படுகிறது.
கனமழை பள்ளி, கல்லூரி விடுமுறை!
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழா!
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
அங்கித் திவாரி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு!
லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 578-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மோதல்!
இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி போட்டிகள்!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், யுபி யோதா அணிகளும் மற்றொரு போட்டியில் புனேரி பல்தான், பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.
ரயில் சேவையில் மாற்றம்!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி – எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரையில் இருந்து புறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஆளுநரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” : தங்கம் தென்னரசு
மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?
top ten news today in Tamil December 20 2023