துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மார்ச் 12) வெளியாகியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் தொடர்ந்து ‘கர்ணன்’, ‘ மாமன்னன்’ படங்களின் வழியாக முன்னணி இயக்குநராக மாறினார். அடுத்ததாக இவர் இயக்கி, நடித்திருக்கும் ‘வாழை’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மார்ச் 12) வெளியாகி இருக்கிறது. பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ‘போர் தொழில்’ படத்தினை தயாரித்த அப்லாஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றன.
படத்தில் துருவ் விக்ரமிற்கு நாயகியாக ‘கொடி’, ‘சைரன்’ படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். பிற நடிக-நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கிறார். மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக துருவ் மாநில அளவிலான கபடி போட்டிகளை நேரில் சென்று பார்த்ததோடு, தனிப்பட்ட முறையிலும் பயிற்சிகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை” : அண்ணாமலை
Rebel ‘பிரேமலு’ மமிதா பைஜூ – ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ரிலீஸ் தேதி இதுதான்!