சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ரிலீஸ் தேதி, லாக் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரின் 23-வது படத்தினை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான பாடி லாங்குவேஜில் வருகிறாராம். ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் மொத்தமாக அதற்கு ஏற்றவாறு தன்னை அவர் உருமாற்றிக் கொண்டுள்ளாராம்.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு லாக் செய்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி வருகின்ற 2௦24 தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ளது. விஜய்க்கு மீண்டும் கம்பேக் கொடுத்த ‘துப்பாக்கி’ படம் 2௦12-ம் ஆண்டு தீபாவளி தினத்தில் தான் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அப்படத்தை முருகதாஸ் இயக்கி இருந்தார்.
‘துப்பாக்கி’ கொடுத்த மாபெரும் வெற்றியால், வரிசையாக தன்னுடைய நடிப்பில் உருவான ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘சர்கார்’ படங்களை தீபாவளி தினங்களில் வெளியாவது போல விஜய் பார்த்துக்கொண்டார். தற்போது அந்த பண்டிகை தினத்தினை தான் சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி லாக் செய்திருக்கிறது.
அடுத்தகட்டமாக அரசியலுக்கு சென்றதால் விஜய் இனி படங்களிலும் நடிக்க மாட்டார். எனவே அவரின் படங்கள் வெளியான தீபாவளி பண்டிகையை சிவகார்த்திகேயன் இனி குறிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொடநாடு வழக்கை விசாரித்த ஐஜி பணியிடமாற்றம்!
“நள்ளிரவே அண்ணாமலையை எழுப்பிய சரத்குமார்” – நடந்தது என்ன?