தேர்தல் பத்திரம்.. அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த எஸ்பிஐ!

அரசியல்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்பிஐ வங்கி இன்று (மார்ச் 21) சமர்ப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதனை தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மார்ச் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்களை தனித்தனியாக எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. அதனை தேர்தல் ஆணையம் தங்கள் இணையதள பக்கத்தில் வெளியிட்டது.

குறிப்பாக, ஆல்பாநியூமரிக் எண்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை, இந்த ஆல்பாநியூமரிக் எண்களை வெளியிட்டால் யார் யார் எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை அளித்தார்கள் என்ற விவரங்கள் தெரியவரும்.

இந்தநிலையில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ச் 21-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்பிஐ வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, எஸ்பிஐ வங்கி நிர்வாக இயக்குனர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள பென் டிரைவில் இரண்டு பிடிஎஃப் பைல்கள் உள்ளது. முதல் பிடிஎஃப்பில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் விவரங்களும், இரண்டாவது பிடிஎஃபில் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது” என்று  தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எடப்பாடி தேர்ந்தெடுத்த அதிமுக வேட்பாளர்களின் பின்னணி!

CSK அணியின் புதிய ‘கேப்டன்’ யாருன்னு பாருங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “தேர்தல் பத்திரம்.. அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த எஸ்பிஐ!

  1. சார் அந்த மினிமம் பேலன்ஸ் ஆட்டய போட்ட அமெளவுண்ட் எவ்வளவுன்னு கேட்டு சொல்லுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *