தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில தலைவராக பொறுப்பேற்றதும் கமலாலயத்தில் பல்வேறு புதிய நிர்வாக நடைமுறைகளை கொண்டு வந்தார்.
பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட தன்னை சந்திக்க வேண்டும் என்றால் உரிய முறையில் தனது செயலாளரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு தான் வர வேண்டும் என்பதும் அந்த நிர்வாக நடைமுறைகளில் ஒன்று.
கட்சி விஷயமாக அவசரமாக மாநில தலைவரான அண்ணாமலையிடம் நேரடியாக சில கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றால் கூட மாநில நிர்வாகிகள் அண்ணாமலையின் உதவியாளரை தான் தொடர்பு கொண்டு நேரம் கேட்க வேண்டும்.
இந்த வகையில் பாஜக மாநில துணைத் தலைவரான ஏஜி சம்பத் நேற்று ஜனவரி 28ஆம் தேதி பகல் 12 மணியளவில் கமலாலயம் சென்று இருக்கிறார். அப்போது அண்ணாமலை கமலாலயத்தில் தான் இருந்திருக்கிறார். ஏ.ஜி.சம்பத் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார்.
அண்ணாமலையின் அலுவலக செயலாளர் ஏ.ஜி. சம்பத்திடம், ” அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“நான் மாநிலத் துணைத் தலைவர்ங்க. தலைவர் கிட்ட சில விஷயங்களை பேச வந்தேன்” என்று ஏ.ஜி. சம்பத் கூறியும், “யாராக இருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் அவரை சந்திக்க முடியும். இல்லேன்னா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க’ என்று கூறியிருக்கிறார்.
சம்பத்தும் மாநில துணைத் தலைவர்களுக்கென கொடுக்கப்பட்ட கேபினில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். ஆனாலும் அண்ணாமலைக்கு டைட் ஷெட்யூல் என்பதால் அவரை சந்திக்க நேரம் இல்லை என சொல்லப்பட்டது.
இதையடுத்து ஆதங்கத்தோடும் விரக்தியோடும் கமலாலயத்தை விட்டு புறப்பட்டு சென்றார் ஏ.ஜி. சம்பத்.
திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை கொடுத்த ஏ. கோவிந்தசாமியின் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஏ.ஜி. சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்
பிபிசி ஆவணப்படம்: மன்னிப்பு கேட்ட மதன் கெளரி
இந்த அவமானமெல்லாம் தேவையானு அவரு யோசிக்கனும்…