காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய காந்தியின் பிறந்தநாள் 2007-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஒரு மணி நேரம் தூய்மை பணி இயக்கம் நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பலரும் தூய்மை பணி மேற்கொண்டனர்.
இந்தநிலையில் காந்தி ஜெயந்தியான இன்று பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தானில் ரூ.7000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் மத்திய பிரேதசத்தில் ரூ.19260 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சாலட்