நேற்று சண்டே விடுமுறை… இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை. சுவையான டிஷ் ஏதாவது செய்யலாமே என்று நினைப்பவர்கள் இந்த முளைகட்டிய பயறு சாலட் செய்து இந்த விடுமுறை நாளை கொண்டாடலாம். இந்த சாலட்டில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளதால் உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். நாள் முழுவதும் உடல் புத்துணர்வு பெற உதவும்.
என்ன தேவை?
முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)
மாங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறுப்பு உப்பு – 2 சிட்டிகை
ஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
நறுக்கிய பச்சை மிளகாய், குடமிளகாய், முளைகட்டிய பச்சைப் பயறு, கேரட் துருவல், மாங்காய்த் துருவல், கறுப்பு உப்பு, ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கிளறவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?