அமெரிக்கா, எகிப்து நாடுகளின் அரசு முறை பயணங்களை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 26) அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக ஜூன் 21-ஆம் தேதி சென்றார். நியூயார்க் நகரில் அன்று நடைபெற்ற 9-வது சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். ஜூன் 22-ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம் போன்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் 23-ஆம் தேதி பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப நல்லுறவு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தை முடித்துவிட்டு ஜூன் 24-ஆம் தேதி எகிப்து சென்றார். அங்கு பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி வரவேற்றார். இதனை தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்கள் இடையே வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.
நேற்று எகிப்து அதிபர் ஃபத்தால் எல் சிசி பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய சிவிலியன் விருதை வழங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி கெய்ரோவில் உள்ள ஹீலியாபோலிஸ் காவல்வெல்த் போர் நினைவிடம், அல் ஹக்கீம் மசூதி, கிசா பிரமிடு, உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
அமெரிக்கா, எகிப்து நாடுகளின் ஆறு நாட்கள் அரசு முறை பயணங்களை முடித்துவிட்டு பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் மீனாக்ஷி லெக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.
செல்வம்
சில்லறை விற்பனையில் ரூ.100-ஐ எட்டும் தக்காளி: காரணம் என்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!