அடிக்கல் நாட்டு விழா!
பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 2) ராஜஸ்தான், மத்தியபிரேதசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தானில் ரூ.7000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் மத்தியபிரதேசத்தில் ரூ.19,260 கோடி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
கிராம சபை கூட்டம்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா!
விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
புதுச்சேரி விமான சேவை துவக்கம்!
புதுச்சேரி விமான நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் மாதம் மூடப்பட்டது. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் விமான சேவை இன்று முதல் துவக்கப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கம் மரியாதை!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 499-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அயலான் அப்டேட் வெளியீடு
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
41 ரயில்கள் ரத்து!
சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் வரையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இங்கிலாந்து, வங்கதேசம் மோதல்!
ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மற்றொரு போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சாலட்
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்: தமிழகத்தில் ரூ.10,481 கோடி!