wபோட்டி பட டிரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி

entertainment

தமிழ்த் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தன் படத்துடன் காந்தி ஜெயந்தி அன்று வெளிவரும் நடிகை அனுஷ்கா நடிக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு புரமோஷனுக்கு உதவியுள்ளார்.

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான்கு இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீஸாருக்கும் இடையே நடக்கும் க்ரைம் த்ரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது.

Happy to present the trailer of #Silence. https://t.co/sNNxpyYgLW#SilenceOnPrime premieres Oct 2 in Tamil & Telugu with dub in Malayalam @PrimeVideoIN@ActorMadhavan #AnushkaShetty @yoursanjali @actorsubbaraju @hemantmadhukar @nishabdham

Congrats team.

— VijaySethupathi (@VijaySethuOffl) September 21, 2020

இந்தப் படம் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

காரணம், சைலன்ஸ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் வெளியாக உள்ளது. தன் படத்துக்குப் போட்டியாக வெளியாகும் படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

**-ராஜ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *