கன்னட நடிகையான ஸ்ரீலீலா தனக்குப் பிறந்த மகள் அல்ல என்று கர்நாடகாவின் பிரபலமான தொழிலதிபரான சூரபனேனி சுபகாரா ராவ் தெரிவித்துள்ளார். இது கர்நாடகாவையும் தாண்டி ஆந்திரா, தெலங்கானா சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
நடிகை ஸ்ரீலீலா நடித்திருக்கும் முதல் தெலுங்கு திரைப்படமான ‘பெல்லி சாண்டட்’ படம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனியின் மகனான மேகா ரோஷன் நாயகனாக நடித்திருக்கிறார். இயக்குநர் கெளரி ரொனான்கி இயக்கியிருக்கிறார்..
இந்தப் படத்தின் விளம்பர வேலைகளின்போது நடிகை ஸ்ரீலீலா, “கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரான சூரபனேனி சுபகாரா ராவ்தான் எனது தந்தை” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதைத் தற்போது அந்தத் தந்தையே மறுத்திருக்கிறார். அவர் நேற்று பெங்களூரில் மீடியாக்களைச் சந்தித்து இந்த மறுப்பினை வெளியிட்டார்.
அவர் பேசும்போது, ஸ்ரீலீலா எனக்குப் பிறந்த மகள் அல்ல. நானும் அவளது அம்மாவான டாக்டர் ஸவர்ணலதாவும் சட்டப்படி விவகாரத்து பெற்று பிரிந்த பின்பு ஸ்வர்ணலதாவுக்குப் பிறந்தவர். இதனால் நான் அவருடைய தந்தை அல்ல. இப்போது என்னை ‘அவருடைய தந்தை’ என்று சொல்வது என்னுடைய சொத்துகளைக் குறி வைத்துதான்.
நான் இதைச் சட்டப்படி சந்திக்கவுள்ளேன். சில வழக்குகள் கோர்ட்டில் இப்போதும் நிலுவையில் உள்ளன. குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு முடிந்துவிட்டாலும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று சில விஷயங்களுக்கு வழக்கு சென்றுள்ளது. மேலும் எனது சூரபனேனி சமூகத்தினரிடம் நான் இது குறித்து புகார் அளித்துள்ளேன். இதற்கு மேலும் நடிகை ஸ்ரீலீலா என் பெயரை வெளியில் பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்” என்றார்.
வீடுகளைக் கட்டித் தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரபனேனி சுபகாரா ராவ். அதோடு ரிசார்ட்டுகளையும் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார். கோவாவில் படகு போட்டி நடத்தும் அமைப்பினையும் நடத்தி வருகிறார். சொத்து மதிப்பு நூறு கோடியைத் தாண்டுமாம்.
நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவில் பிறந்து கர்நாடகாவில் செட்டில் ஆனவர். இவருடைய அம்மா ஸ்வர்ணலதா ஒரு மருத்துவர். ஸ்ரீலீலா முதலில் ஒரு மாடலாக அறிமுகமானார். 2019ஆம் ஆண்டில் ஏ.பி.அர்ஜூன் இயக்கிய ‘கிஸ் இன் கன்னடா’ மற்றும் ‘பாரதே’ ஆகிய கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் இப்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் முதல் படம் ‘பெல்லி சண்டாட்’. இந்தப் படத்தில் இவரது நடனமும், நடிப்பும் சிறப்பாக இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் எழுதி வருகின்றன. படமும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இந்த நேரத்தில் நாயகி ஸ்ரீலீலாவின் குடும்ப விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
**-இராமானுஜம்**
�,”