நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் கர்ணன்

entertainment

பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் தனுஷ் நடித்த ‘கர்ணன்’.

‘கர்ணன்’ படத்திற்குச் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த 2021 ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப்படத்தில் தனுஷுடன்,ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம்,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணுவே, இந்தப் படத்தையும் தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் வெளியானது ‘கர்ணன்’ படம்.

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கர்ணன் படத்தை கொண்டாடினார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் இந்தப்படம் வெற்றிபெற்றது

கொரோனா அச்சத்தையும் கடந்து திரையரங்குகளில் கர்ணனுக்கு பெருமளவு ரசிகர்கள் திரண்டனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் திரையிடப்பட்ட

இரு வாரங்களில் திரையரங்கங்களை மூட அரசு உத்தரவிட்டதால் படத்தை திரையரங்குகளில் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

அதனைத் தொடர்ந்து ஓடிடியில் கர்ணன் படம் வெளியானது. சப் டைட்டில் உதவியுடன் இந்தியாவின் பிற மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்தது. இந்திய அளவில் ‘கர்ணன்’ படத்திற்குப் பல விமர்சனங்கள் எழுதப்பட்டன. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் ‘கர்ணன்’ படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

’தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஓடிடியில் பார்க்கத் தேர்வு செய்துள்ள சிறந்த ஐந்து படங்கள் பட்டியலில் ‘கர்ணன்’ படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தமிழ் சினிமா கவனம் பெற்றுள்ளது.

**-அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *