Aசாதனை படைக்கும் அனிருத்

entertainment

தமிழ் சினிமாவில் குறுகிய வருடங்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் முன்னணி இசையமைப்பாளரானவர் அனிருத். இந்த வருடம் அடுத்த சில மாதங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ள படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன. அந்தப் படங்களின் பாடல்கள் வெளிவந்து யூடியூப்பில் அதிக பார்வைகளையும், விருப்பங்களயும் பெற்று வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து ஏப்ரல் 28ல் வெளிவர உள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அனிருத் இசையமைத்துள்ள ‘டூ டூ டூ’ பாடல் யூடியூப்பில் 38 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்து மார்ச் 25ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘டான்’ படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்றுள்ள ‘ஜலபுல ஜங்கு’ பாடல் 34 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளான ‘அரபிக் குத்து’ பாடல் பிப்ரவரி 14 அன்று வெளியாகி இரண்டு நாட்களுக்குள்ளாகவே 31 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையில் வெளியாக இருக்கும் படங்களின் பாடல்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று கோடி பார்வைகளை பெற்றுள்ளது சாதனையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *