Zஜி நம்மளை சொல்லலை: அப்டேட் குமாரு

entertainment

இன்னிக்கு தமிழ் நாட்டில அமித் ஷா வந்ததை தவிர வேறு எதுவுமே நடக்கலைங்குற மாதிரி டிவியில எல்லாம் அமித் ஷா கிளம்புறாரு… கிளம்பிட்டாரு… வர்றாரு… வந்துட்டாரு… னு கிரிக்கெட் மேட்ச் கமெண்ட்ரி போல பேசிக்கிட்டே இருக்காங்க. அவரோ மேடையில பரம்பரை வாதத்துக்கு பாடம் புகட்டுவோம்னு சொல்றாரு. இதைப் பார்த்த ஓபிஆரும் அன்புமணியும் ஜி‌ நம்மளை சொல்லலைங்குற மாதிரி யே வேற எங்கேயோ பாக்குறாங்க.

நீங்க அப்டேட் பாருங்க

*PrabuG*

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் – எடப்பாடியார்.

ட்விட்டர்ல மட்டும்தான் காப்பி பேஸ்ட் நடக்குதுன்னு தப்பா நினைச்சுட்டேன் …

*கோழியின் கிறுக்கல்!!*

#GoBackAmitShah வேறு எந்த நாட்டில் இருந்தோ trend ஆகிறது என்று சொல்பவர்களுக்கு,

ஆமா, நாங்க “தமிழ்நாடு”!!

*ரஹீம் கஸ்ஸாலி*

ஒரு மத்திய அமைச்சரை வரவேற்க ஏர்போர்ட்டுக்கே செல்லும் முதல்வரை கொண்ட கட்சிதான், எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலில் பிஜேபியை கழட்டிவிட்டுட்டு தேர்தலை சந்திக்கப்போகிறதாக்கும்…

ம்..ஹூம்… வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை.

*பர்வீன் யூனுஸ்*

எல். முருகன் – வேல் யாத்திரை – கைது – விடுதலை.

உதயநிதி – தேர்தல் பிரச்சாரம் – கைது – விடுதலை.

அடுத்து யார்..?

*நாகராஜ சோழன் MA.MLA*

உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் – அமித்ஷா

ஆனா தமிழை விட சமஸ்கிருதத்திற்கு தான் உங்க அரசு அதிக நிதி ஒதுக்கியது என்பது உண்மையா இல்லையானு சொல்லுங்க ஜி.

*balebalu*

மொட்டை மாடி வாக்கிங் கால்களுக்கு மட்டும் அல்ல காதுகளுக்கும் வேலை கொடுக்கிறது,

” பக்கத்து வீட்டு வம்புகளுக்கு” !

*சரவணன். ℳ*

படுபாவிகளா குட் மார்னிங் சொன்னா அதோட போக வேண்டியது தானே…? பதிலுக்கு #GobackAmithsha ன்னு ரிப்ளை பண்றீங்களேடா…?

*காளையன்*

அம்மா; இப்படி பொறுப்பில்லாம சுத்துனா

நாளைக்கு உனக்கு யாராவது பொண்ணு குடுப்பாங்களா?

பையன்; பொறுப்போட சுத்துனா இன்னைக்கே பொண்ணு குடுத்துடுவாங்களா?

*மயக்குநன்*

ஸ்டாலினுக்கு தினந்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கமே வரும்!- முதல்வர் பழனிசாமி.

அவரும்… உங்க சிரிப்புக்கு மயங்கிட்டார்னு சொல்றீங்களா..?!

*லாக் ஆஃப்*�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *