G.O.A.T : விஜய்யுடன் நடிக்கும் வெங்கட் பிரபு?

சினிமா

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் உள்ள முக்கியமான படம் நடிகர் விஜய்யின் 68 -வது படமான “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T).

இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபு தேவா,நடிகர் மோகன், நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் G.O.A.T படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா G.O.A.T படத்திற்கு  இசையமைக்கிறார்.

G.O.A.T படம் “A Venkat Prabhu Hero” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது தயாரிப்பாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். அதேபோல் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்த படத்தில் திரிஷா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்க, தற்போது மற்றொரு முக்கிய நபரும் இந்த படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை, இந்த படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தான்.

G.O.A.T படத்தில் வெங்கட் பிரபு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த படத்தில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்து நடித்தால் இது அவருக்கு விஜய்யுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் ஆகும்.

ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி படத்தில் வெங்கட் பிரபு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  வரும் மே மாதம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்னும் சிக்காத சிறுத்தை ? – திணறும் வனத்துறை… திகிலில் டெல்டா!

டாப் ஹீரோ நடிக்கும் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்?.. அனிமல் இயக்குனர் அடுத்த சர்ச்சை.!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *