பாப் இசையில் முடி சூடா மன்னனாக திகழந்தவர் மைக்கேல் ஜாக்சன். இன்றும் அவரது பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இசைத்துறையில் பல சாதனைகள் செய்திருந்தாலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். பல அறுவை சிகிச்சை செய்து தனது உடலின் நிறத்தையே மாற்றிக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
திருமணம் முறிவுகள் மற்றும் குழந்தை பாலியல் சீண்டல்கள் போன்ற பல சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபடுகிறது.
இந்நிலையில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று, முன்னணி இயக்குனர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அது வேறு யாரும் இல்லை சமீபத்தில் வெளியாகி 900 கோடி வசூல் செய்த ‘அனிமல்’ திரைப்படத்தின் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா தான்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் ” எப்போதாவது ஒரு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விரும்புகிறேன். அதிலும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை இயக்க விரும்புகிறேன்.
ஆனால் அதில் நடிக்கப் போவது யார் என்று தான் தெரியவில்லை. அப்படி ஒரு நடிகன் கிடைத்து விட்டால் அதை ஹாலிவுட் வரை தூக்கி ஆங்கிலத்தில் உருவாக்கலாம்.
தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, பள்ளிப் படிப்பு வரை மிகவும் சுவாரசியமான வாழ்க்கையை நடத்தியவர் மைக்கேல் ஜாக்சன். இது ஒரு சிறந்த பயணம். சிறந்த கதை. எல்லாரும் டிக்கெட் வாங்குவார்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த திரைப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சர்ச்சை இயக்குனரின் கையில் இந்த படம் சிக்கினால் எப்படி இருக்குமோ, என்று ஷாக் ஆகி உள்ளனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: அன்னாசி சல்ஸா
GTvsRR : 19வது ஓவரில் ட்விஸ்ட்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்!