இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஃபர்ஹானா

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. இந்த படம் இன்று (ஜூன் 16) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தமிழரசன்

கௌசல்யா ராணி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நடிப்பில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வெளியான படம் ‘தமிழரசன்’. இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் இன்று ஜூன் 16ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இராவண கோட்டம்

‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாகவும் , ஆனந்தி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.
இவர்களுடன், பிரபு, இளவரசு, தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகர் இசையமைத்திருந்தார். இப்படம் இன்று ஜூன் 16ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
பிச்சைக்காரன் 2

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.
இதில் அவருடன் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்