‘அவங்க வாழட்டும் விடுங்க…’- பிக் பாஸ் பிரதீப் வேண்டுகோள்!

சினிமா

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிரதீப் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு பிக்பாஸ் வீட்டைவிட்டு பிரதீப் ஆண்டனி வெளியேறினார். பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தை காரணம் காட்டி அவரை கமல் வீட்டை விட்டு அனுப்பினார். சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் பலரும் பிரதீப்பை வெளியில் அனுப்பி வைத்தது தவறு என்று கமல், விஜய் டெலிவிஷன் சமூக வலைதளங்களை டேக் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதீப் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளம் வழியே இன்று (நவம்பர் 7) வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் நிறைய யூடியுபர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் ஆகியோருக்கு வெறுப்புகளை உமிழும்  கன்டென்ட் உருவாக்குவது தான் வேலை. அவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டும். என்னோட  கன்டென்ட்டை நானே உருவாக்கி கொள்கிறேன். எதிலும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இதை ப்ரீயா விடுங்க” என கேட்டு கொண்டிருக்கிறார்.

பிரதீப்பின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக உத்தரவு!

அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *