பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்றது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசை ஆர்வலர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6,000 மாணவர்களிடையே பிஎஸ் 2 கீதத்தை வெளியிட ஒட்டுமொத்த படக் குழுவும் வந்திருந்தது.

இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசும்போது,

 “இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சியை இங்கு நடத்த அனுமதி வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நன்றி.

எனது நடிப்பை ஏற்று முதல் பாகத்தில் பாராட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாதியில் இந்த படத்தைப் பற்றி அதிகம் பேசினேன். இங்குள்ள பார்வையாளர்களைப் போலவே இந்த நிகழ்வையும் ரசிக்க வந்துள்ளேன்.இந்தப் படத்திற்காக ‘பிஎஸ்கீதம்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் சார் உருவாக்கியுள்ளார். அவர் எப்போதுமே பாஸ்தான்..” என்றார்.

இதன் பின்பு மாணவர்களுக்காக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஒரு பாடலை பாடினார் விக்ரம். “ராகத்தில் தவறு ஏதும் இருந்தால் ரஹ்மான் சார்.. சாரி சார்..” என்று சொல்லிவிட்டு பாட.. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

நடிகர் கார்த்தி பேசும்போது, 

“என்ன மாமா சௌக்கியமா? இவ்வளவு நேரம் இங்கு காத்திருந்ததற்கு மிக்க நன்றி. அதற்காக உங்களுக்கு ஒரு ஐ லவ் யூ. இங்கு இருக்கின்ற எல்லா இளவரசிகளின் உயிரும் உங்களுடையது தேவி.

என்ஜினியர் படிக்க வேண்டுமென்று ஒரு பையனுக்கு தலையில் எழுதி இருந்தால் ஒன்று IIT போகணும். இல்லையென்றால் அண்ணா யுனிவர்சிட்டி வரணும். நானும் என்ஜினியர்தான். நான் ஆசைப்பட்டேனோ இல்லையோ? எங்க அம்மா அப்பா ஆசைப்பட்டார்கள். அண்ணா யூனிவர்சிட்டி உள்ள போக வேண்டுமென்று முயற்சி செய்தேன். ஆனால், கடைசி வரை இடம் கிடைக்கவே இல்லை. 

இங்கு வந்து ரன்னிங் போனதுதான் மிச்சம். நான் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக இதே மைதானத்தை அதிக சுற்றுகள் ஓடிய நினைவுகள் எனக்கு நன்றாகவே இருக்கிறது.

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை பற்றி விஜய் அண்ணன் ஒரு மேடையில், ”எது நமக்கு ரொம்ப வேண்டுமென்று தவிக்கிறோமோ, அது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று கூறி இருப்பார்.

பள்ளிக்கூடம் படித்தது ஆண்களுடன், அதன் பிறகு கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினியர், ஆசிரியர் கூட ஒரு பெண் ஆசிரியர் இருக்க மாட்டார்கள். எப்போது காதல் செய்வோம் என்று ஏங்கியதற்கு வந்தியத்தேவன் போன்ற ஒரு கதாபாத்திரம் இப்போது கிடைத்துள்ளது.

உலக அழகிக்கும் லைன் போடுகிறோம். மிஸ் சென்னைக்கும் லைன் போடுகிறோம். மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் லைன் போடுகிறோம். யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம். மணி சாருக்கு நன்றி.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கூட்டத்தைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே அதிர்வைக் கொடுத்த மாணவர்களுக்கு நன்றி. CSK போட்டியில் இருப்பது போல இங்கு கூட்டம் இருப்பதில் மகிழ்ச்சி.

நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அவருடன் நான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன். விக்ரம் சார் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கே இருக்கும் பொன்னியின் செல்வன் குழுவில் உள்ளவர்கள் எனக்கு போன் செய்தால் என்ன ரிங் டோன் வைத்திருப்பீங்கன்னு கேட்டாங்க.

ஜெயம் ரவிக்கு, – என்னுடைய போன் ரிங் டோன், டண்டணக்கா.. பாடல், 

விக்ரம் சார்க்கு – ஒ… போடு.. பாடல், 

திரிஷாக்கு – காதலே காதலே தனிப்பெருந்துணையே… மற்றும் உலக அழகியே.. பாடலும் பொருந்தும், 

ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு – நிலா அது வானத்து மேலே.. பாடல்,

ஐஸ்வர்யாராய்க்கு – அன்பே அன்பே என்னை கொல்லாதே பாடல். 

இசைப் புயல் சாருக்கு – பாம்பே படத்தின் பின்னணி இசைதான் இருக்கும். அந்த பின்னணி இசையைக் கேட்டாலே லவ் பண்ணாம இருக்க முடியாது என்றார்.

நடிகை த்ரிஷா பேசும்போது,

 “பொன்னியின் செல்வன் 1 ஆம் பாகத்தில் எனது கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டியதற்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இரண்டாம் பாகம் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கார்த்திக்கும் எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பற்றி அனைவரும் பேசினர். இந்தத் திரைப்படத்தில் அதிகமான வெறித்தனம் கொண்ட சண்டைக் காட்சிகள் இருக்கும்.
திரையரங்கில் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

vanthiyathevan remembered actor vijay quotes in ps2 function

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசும்போது,

 “அலை கடலா.. பாடல் போன்ற பாடல் முதல் பாகத்தில் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் பாடலையும், இந்த பிஎஸ் கீதத்தையும் எழுதியவர் சிவா ஆனந்த் சார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

vanthiyathevan remembered actor vijay quotes in ps2 function

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,

“நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை. மணிரத்னம் சார் இந்த ஆல்பத்தை இயக்கும்படியாக ஒரு பாடலை விரும்பினார். அப்போதுதான் இந்த கீதம் உருவாகியது” என்றார்.

vanthiyathevan remembered actor vijay quotes in ps2 function

நடிகர் ஜெயராம் பேசும்போது,

“இந்த மாலையை ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, விக்ரம், நடிகை த்ரிஷா போன்ற சிறந்த கலைஞர்கள் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸின் அனைத்து முக்கிய பிரமுகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

கடந்த ஆண்டு பிஎஸ் 1 நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நான் ஷூட்டிங்கில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மணிரத்னம் சார் கேட்டார். அப்போதுதான் முழு வேடிக்கையான நாடகம் நடந்தது. இந்த படம் தொடங்கியதும், எம்.ஆர்.சி.நகரில் பயிற்சி பெறும் மற்ற நடிகர்கள் போல் குதிரை சவாரி கற்கும்படி மணி சார் என்னிடம் கேட்டார். தாய்லாந்தில் காட்சிகளை படமாக்க முடிவு செய்தபோது, குதிரைகள் புதியவை, அனைத்து நடிகர்களும் நிறைய சிரமங்களை அனுபவித்தனர்.

அப்போதுதான் சிறு வயது முதலே குதிரை சவாரி செய்து அதில் நிபுணராக இருப்பவர் பிரபு சார் என்பதால் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அதில் நிறைய வேடிக்கையான அனுபவங்கள் இந்த படப்பிடிப்பின்போது நடந்தது.

இந்த படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படம் ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும், படத்தைப் பார்த்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

vanthiyathevan remembered actor vijay quotes in ps2 function

இறுதியாக சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில், ‘பிஎஸ்கீதம்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். முடிவில், இப்பாடல் ஆசிரியரும் மெட்ராஸ் டாக்கீஸ் இணை தயாரிப்பாளருமான சிவா ஆனந்த் நன்றி தெரிவித்து பேசினார். 

இராமானுஜம்

48 மணி நேர கெடு: அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக!

ஐபிஎல் வரலாற்றில் 15 ஆண்டுகால ஏக்கத்தை தணித்த கே.கே.ஆர் அணி வீரர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts