‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என்று நேற்று மாலை நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.
கார்த்தி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று வெளியான‘விருமன்’, செப்டம்பர் 30 அன்று வெளியான ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் தீபாவளி வெளியீடாக வந்த ‘சர்தார்’ ஆகிய மூன்று படங்களும் தொடர்ந்து வணிக ரீதியான வெற்றியை பெற்றுள்ளன.
இந்த மூன்று படங்களில் கார்த்தி இரண்டில் கதாநாயகனாகவும், பொன்னியின் செல்வன் படத்தில் கதையை நகர்த்தி செல்லும் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
இதுவரை கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படங்களில் நீண்டகால தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் சர்தார்.
இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
தீபாவளிக்கு வெளியான ‘சர்தார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் வெற்றி விழா நேற்று மாலை சென்னையில் உள்ள தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்” என்றார்.
இராமானுஜம்
காப்புரிமையை மீறி இயற்றப்பட்ட காந்தாரா பாடல்?
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்… ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்! – வைகோ