தளபதி விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் நான்காவது ஹீரோயினாக திரிஷாவும் சமீபத்தில் இணைந்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் மூலமாக திரிஷா இதனை உறுதி செய்துள்ளார். படத்தில் ஒரு பாடலுக்கு விஜய் உடன் இணைந்து அவர் நடனம் ஆடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கதைப்படி விஜயின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் வில்லனாக மோகனும் நடித்து வருகின்றனர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களும் ஒருசில காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வருகிறார். இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ஒரு விஜய் வில்லனாக வருகிறாராம்.
படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்லவிருக்கின்றனர். விஜயின் 5௦-வது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி ‘GOAT’ திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் தளபதி விஜய் ஒரு பாடலையும், இசைஞானி இளையராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளனர். கங்கை அமரன், அறிவு ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கின்றனர். இதுவரை 3 பாடல்களுக்கான பின்னணி இசையை யுவன் முடித்து விட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி அடுத்த வாரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இது விஜய் – மீனாட்சி சௌத்ரி இடையிலான காதல் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன்னுடைய சமீபத்திய ட்வீட்டில் இதனை உறுதி செய்திருக்கிறார். மேலும் ரசிகர்களின் காத்திருப்பிற்கு ஏற்றதுபோல வொர்த்தான அப்டேட்டாக இருக்கும் என்றும், வெங்கட் பிரபு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவைத் தேர்தல் தேதி : முழு விவரம்!
மதுபான ஊழல் வழக்கு: கவிதாவுக்கு ED கஸ்டடி!