நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற அப்டேட்டை சில மணி நேரங்களுக்கு முன்புதான் லைக்கா நிறுவனம் அறிவித்தது. நான்காவது முறை ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்க போகும் செய்தியை சமூக வலைதளங்களில் ஃபயர் விட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அந்த கொண்டாட்டமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்.
ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் “லால் சலாம்” படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். கிரிக்கெட் மற்றும் கம்யூனிசத்தின் பின்னணியைக் கதைக்களமாக கொண்டு லால் சலாம் படம் உருவாகி வருவதாக சில தகவல்கள் வெளியானது. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
LAL SALAAM to hit 🏏 screens on PONGAL 2024 🌾☀️✨
🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕 @NjSatz
🎙️ @RIAZtheboss @V4umedia_
🎨🖼️ @kabilanchelliah
🤝 @gkmtamilkumaran… pic.twitter.com/4XOg3sozSs— Lyca Productions (@LycaProductions) October 1, 2023
இந்நிலையில், தற்போது லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்து அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் ரஜினி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சினிமா உலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த பட அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியாவது “கொஞ்சம் புதுசா இருந்தாலும், இதுவும் நல்லா தான் இருக்கு”. இன்றைக்கு ரஜினிக்கு போட்டி ரஜினி தான்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது: அண்ணாமலை
‘GHOST’-ஆக மிரட்டும் சிவராஜ்குமார்: கன்னட சினிமா யுனிவெர்ஸ் ரெடி!