கிரிக்கெட் ஆர்வலரான நடிகர் யோகி பாபு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு அணியின் கேப்டன் தோனியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் மூலம் வேடிக்கையாக கேட்க அதற்கு நிகழ்வில் இறுதியாக பேசிய தோனி கூறிய பதில் அரங்கத்தை அதிர வைத்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது படத்தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக எல்.ஜி.எம் என்ற தமிழ் படத்தை தயாரித்துள்ளார்.
இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது.
வழக்கமான சினிமா இசை வெளியீட்டு விழா போன்று இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சி போல் சினிமா இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடங்கியபின் தாமதமாக வந்த யோகிபாபு பேசிய போது அவரது பேச்சின் முக்கிய பகுதிகளை நிகழ்ச்சி தொகுப்பாளர் தோனிக்கு ஆங்கிலத்தில் கூறி வந்தார். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு, படத்தை குறித்து பேசினார்.
தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு தோனி வசம் வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு பதில் அளித்த தோனி, “ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் சிஎஸ்கே அணியில் உங்களுக்கான இடம் உள்ளது. நான் அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறீர்கள். நான் சொல்கிறேன். நீங்கள் கன்சிஸ்டியுடன் விளையாட வேண்டும். உங்களை காயப்படுத்தும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசுவார்கள்” என்று கூறினார்.
இராமானுஜம்
சட்டம் ஒழுங்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!
810 பக்கம்… ரூ.127 கோடி : முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!