சட்டம் ஒழுங்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!

தமிழகம்

குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். தமிழ்நாடு டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்ற பின்பு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, “காவல்துறை மற்றும் அனைத்து அரசு துறை செயலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பு தந்து பணியாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று சொல்வதால் நிறைய பிரச்சனை இருப்பதாக நீங்கள் கருத தேவையில்லை. சட்டம் ஒழுங்கானது பெரிய அளவில் பிரச்சனைக்குள்ளதாக இல்லை என்பது தான் நம்மை மட்டுமல்ல மக்களையும் மகிழ்வித்து வரும் செய்தி.

ஒரு அரசு முறையாக செயல்படுவதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு இன்று அமைதி பூங்காவாக திகழ்வதற்கு காரணம் நமது அரசு சட்டம் ஒழுங்கிற்கு கொடுத்து வரக்கூடிய முக்கியத்துவம் தான். நிம்மதியும் அமைதியும் இருந்தால் தான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

அந்தவகையில் மிக மிக நிறைவான காலமாக இரண்டு ஆண்டு காலம் அமைந்துள்ளது. இதற்காக காவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த மாதங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் குற்ற வழக்குகள் சட்ட ஒழுங்குகள் குறித்த நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

காவல்துறை செயல்பாடுகள் மிக மிக திருப்திகரமாக உள்ளது என்றாலும் அடுத்து வரும் ஓராண்டு காலம் மிகவும் முக்கியமானது. இந்த காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கண்டறியப்பட்டவுடன் முறையாக முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் வண்ணம் பெரிய நிகழ்வாக உருமாறுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்திற்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் மிக மிக எச்சரிக்கையுடன் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் செயல்பட வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் போது கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களை எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது. காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். கல்விக்கூடங்கள், பணியிடங்கள், பொது இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நம்முடைய தலையாய கடமை.

பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விரும்பத்தகாத கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்தது.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தலை முற்றிலுமாக அகற்ற வாரம்தோறும் கண்காணிப்பு கூட்டம் நடத்த வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல் வன்மங்களை பரப்புபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு – நீதிபதி கேள்வி!

810 பக்கம்… ரூ.127 கோடி : முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *