நானியின் தசரா அப்டேட்!

சினிமா

நானி நடிப்பில் உருவாகியிருக்கும் புதுமையான படைப்பான ‘தசரா’ படம் 2023 மார்ச் 30-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும், தெலுங்கு படவுலகில் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நானியின் நடிப்பில், முதல் பன்மொழி திரைப்படமாக தயாராகி வருகிறது ‘தசரா’ திரைப்படம். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் கதை தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி கரையில் சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் கூறுகிறபோது, “நடிகர் நானி தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி முதல் முறையாக முழுக்க முழுக்க ஒரு கிராமத்தான் கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலங்கானா பேச்சு வழக்கு மொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

actor naani acted local look
date

ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.

தசரா படம் 2023‘தசரா விழா கொண்டாடப்படும் வாரமான மார்ச் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்புக்காக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் நாயகன் தூசி படிந்த கைலி சட்டையுடன் நானி கிராமத்து லுக்கில் இருக்கிறார்.

அவரது ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டுத்தனத்தைக் கூட்டி அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் உருவப் படம் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓதெலா இயக்குகிறா.ர் ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், இசை: சந்தோஷ் நாராயணன்.

இராமானுஜம்

“நான் சாதாரண கணக்கு வாத்தியார்” – இருபது வேடங்களில் மிரட்டும் கோப்ரா விக்ரம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *