இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.
இந்த படத்தில் அவருடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் , ஜாக்கி ஷெரப், யோகி பாபு நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியதில் இருந்தே படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பிற ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியது.
இந்நிலையில், இன்று இந்த படம் வெளியான திரையரங்குகளுக்கு ரஜினி ரசிகர்கள் சிறை கைதிகள் வேடமணிந்து வந்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதனிடையே சமூகவலைதள பக்கங்களில் JailerFDFS என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தொடர் விடுமுறை: ஆகஸ்ட் 15 வரை நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்
அகதிகள் சென்ற கப்பல் கவிழ்ந்து 41 பேர் பலி!
பேகம் இல்ல பிராமின்: ‘குஷி’ ட்ரெய்லர் எப்படி
மெண்டலின் ரசிகர்கள் மெண்டலாகத்தான் இருப்பார்கள்