சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் 2018ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பின் தற்போது ’குஷி’ படத்தில் சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஜெயராம், சச்சின் கெடக்கர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணெலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மற்றும் சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள ‘குஷி’ படத்தின் ட்ரெய்லர் மதம் மாறிய காதல், பெற்றோரை எதிர்த்து திருமணம் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
தொடக்கத்தில் வரும் காதல் ரசிக்க வைக்கிறது. அடுத்து வரும் ட்விஸ்ட், தொடர்ந்து நிகழும் கல்யாணம், அதையடுத்து நிகழும் பிரிவுகள் என முழுக்க முழுக்க காதல்..கல்யாண பிரச்சினைகளை மையப்படுத்தி நகர்கிறது ட்ரெய்லர்.
சாதாரண காதல் கதை
அதற்கு எதற்கு காஷ்மீர் பிண்ணனியில் கதை நகர்கிறது என்கிற கேள்விக்கான பதில் படத்தில் இருக்கும் என எதிர்பார்ப்பை ட்ரெய்லர் உணர்த்துகிறது. தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான ஜோடிகளாக கூறப்படும் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் தனி தனியாக நடித்து வெளியான ’டைகர்’, ’சாகுந்தலம்’ போன்ற படங்கள் மோசமான தோல்விகளை சந்தித்தது. அதனால் ’குஷி’ திரைப்படம் இருவருக்குமே முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 1 ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இராமானுஜம்
கொளுத்தும் வெயில்: கூலாக்க வரும் மழை!
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்!
செந்தில் பாலாஜி சகோதரர் பங்களா வீட்டை முடக்கிய அமலாக்கத்துறை!