இத்தாலி அருகே லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன் சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து புறப்பட்ட கப்பல், இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக இந்த விபத்தில் இருந்து தப்பிய நான்கு பேர் கொண்ட குழு தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் ஒரு சரக்குக் கப்பல் மூலம் மீட்கப்பட்டதாகவும், பின்னர் இத்தாலிய கடலோர காவல்படை கப்பலுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர் என்று அமெரிக்க அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
ராஜ்
கொளுத்தும் வெயில்: கூலாக்க வரும் மழை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!