Famous actor RS Shivaji passed away

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

சினிமா

பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று ( செப்டம்பர் 2 )காலமானார். அவருக்கு வயது 66.

ஆர்.எஸ். சிவாஜி 1981 ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கமலின் வெற்றிப்படங்களான ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘குணா’, ‘கலைஞன்’ என பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் 1989ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது.

‘8 தோட்டாக்கள்’, ‘வனமகன்’, என சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த ஆர்.எஸ். சிவாஜி, நெல்சன் திலீப் குமர் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் நடித்தார்.

அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ’கார்கி’ திரைப்படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார். இதனிடையே நேற்று (செப்டம்பர் 1) வெளியான யோகி பாபுவின் லக்கி மேன் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இப்படி நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்ற ஆர்.எஸ்.சிவாஜி இன்று (செப்டம்பர் 2) தன்னுடைய 66 வது வயதில் காலமானார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானத்தின் மகன் என்பதும் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆதித்யா எல் 1: கனவு நிறைவேறியது… திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி பெருமிதம்!

தமிழர் அல்லாதவரின் எரிச்சல்: விஜயலட்சுமியின் வீடியோவை வெளியிட்ட சீமான்

அனுமதியின்றி ஆதியோகி சிலை கட்டப்பட்டதா?: ஈஷா சொல்வது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *