பால், தயிருக்கு மட்டுமல்ல… பாலில் இருந்து பெறப்படும் பனீர், சீஸ் போன்றவற்றை வைத்துச் செய்யப்படுகிற சமையலுக்கு எப்போதுமே தனி ருசி உண்டு. அந்த வகையில் ஹெல்த்தியான இந்த காட்டேஜ் சீஸ் சாலட் செய்து வாரத்தின் முதல் நாளை ஸ்பெஷலாக்கி வரவேறுங்களேன்.
என்ன தேவை?
பனீர் (காட்டேஜ் சீஸ்) – 250 கிராம்
கேரட் – 100 கிராம்
பூண்டு – 2 பல்
லெட்யூஸ் இலை – 150 கிராம்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – அரை டீஸ்பூன்
வால்நட் – 4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: சுயமாக டயட் இருக்கிறீர்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!
கிச்சன் கீர்த்தனா : காளான் லசானியா
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!
இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு