NBK 109 First Glimpse video

பாலையாவின் வேட்டை ஆரம்பம்: NBK 109 வீடியோ இதோ!

சினிமா

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைப்பார்கள். NBK 109 First Glimpse video

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “பகவத் கேசரி” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூல் செய்து ஹிட் பட்டியலில் இணைந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பாலகிருஷ்ணாவின் 109 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி கொல்லி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன் பாபி கொல்லி இயக்கிய “வால்டர் வீரய்யா” திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், பாலையா – பாபி கூட்டணியில் உருவாகும் NBK 109 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து பாலையா படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் தமன் NBK 109 படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில், மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு NBK 109 படத்தின் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஒரு காடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, திசை தெரியாமல் குதிரைகள் அங்கும் இங்கும் ஓடுகிறது, அந்த காட்டுக்குள் ஒரு கார் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து அந்த காருக்குள் ஹீரோ பாலையா அமர்ந்து கொண்டு இருக்க, திடீரென ஒரு பெட்டியுடன் அந்த காரில் இருந்து பாலையா ஸ்டைலாக இறங்கி வருகிறார்.

அவர் கையில் வைத்திருக்கும் பெட்டியை திறந்தவுடன் அந்த பெட்டிக்குள் பல ஆயுதங்கள் உள்ளது, அதனுடன் ஒரு மதுபாட்டிலும் இருக்கின்றது. இந்த காட்சியை தொடர்ந்து ” நீ போர் செய்யப் போகிறாயா” என்று எதிரியின் குரல் ஒலிக்க, அதற்கு “ஒரு சிங்கம் நரி கூட்டத்தை துரத்த தொடங்கினால் அது போர் அல்ல.. அதற்கு பெயர் வேட்டை” என்று ஹீரோ பாலையாவின் மாஸ் வசனம் அவரது குரலில் ஒலித்து முடித்தவுடன் பெட்டியில் இருந்த மதுவை வேகமாக குடித்துவிட்டு, ஆயுதங்களை எடுத்து எதிரிகளை சரமாரியாக வெட்டி சாய்கின்றார் ஹீரோ பாலையா.

இந்த வீடியோவை பார்க்கும் போதே இந்த படம் ஒரு பக்கா ஆக்சன் கமர்ஷியல் படமாக தான் வெளியாக உள்ளது என்று நமக்கு புரிந்துவிடும். நிச்சயம் பாலையா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட போகின்றனர். மேலும், கூடிய விரைவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

வுமன்ஸ் டே விஷ் கூட பேக் ஐடிக்கு தானா? : அப்டேட் குமாரு

J Baby : ஜெ பேபி – திரை விமர்சனம்!

மகளிர் தினத்தில் சச்சின் பாராட்டிய பெண்மணி : யார் இந்த ஜசிந்தா கல்யாண்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *