‘தளபதி 69’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது உறுதியான சூழ்நிலையில், இயக்குநர் மட்டும் இழுபறியாகவே இருந்து வந்தது. தற்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுநாள்வரை ஏப்ரல் கடைசியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இயக்குநர் யாரென்பது குறித்து விஜய் விரைவில் அறிவிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜயின் கடைசி படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்க்கு கிடைத்துள்ளதாம்.
தெலுங்கின் மாஸ் + கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் திரிவிக்ரம் இதுவரை தமிழ் படங்களை இயக்கியதில்லை. இந்த செய்தி 100% உறுதியாகும் பட்சத்தில் அவரின் முதல் தமிழ் படமாக இது இருக்கும்.
தமிழ் இயக்குநரை விட தெலுங்கு இயக்குநர் படத்தை இயக்கினால் ஆந்திரா, தெலங்கானா பகுதிகளிலும் வசூலை அள்ளி விடலாம் என டிவிவி நிறுவனம் கணக்கு போடுகிறதாம். அந்த வகையில் தான் தமிழின் முன்னணி ஹீரோ + தெலுங்கின் முன்னணி இயக்குநர் என்ற கூட்டணியை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி அமைந்தால் அது பல்வேறு வகையிலும் நன்மையாக இருக்கும் என்பதால் தளபதி விஜயும் இதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உழைக்கும் எறும்பு தமிழ்நாடு,.. ஊதாரி சில்வண்டு உத்திரப்பிரதேசம்- கனிமொழி சொன்ன குட்டி ஸ்டோரி!