டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அட்லி அதற்காக வாங்கப்போகும் சம்பளம் தான், லேட்டஸ்ட் ‘ஹாட்’ டாபிக் ஆக உள்ளது. atlee tollywood salary details
‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அப்படம் ஹிட்டடிக்க தொடர்ந்து தளபதி விஜயை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களை இயக்கினார்.
மீண்டும் விஜயை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிவுட் சென்றார். அங்கு ஷாரூக்கானை வைத்து அட்லி இயக்கிய ‘ஜவான்’ உலகம் முழுவதும் 1௦௦௦ கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனால் பாலிவுட்டிலும் அட்லியின் மவுசு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் அட்லி என்ட்ரி கொடுக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து அட்லி படமொன்றை இயக்கவுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்குப்பின் அவர் அட்லி படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகின்றன. என்றாலும் இப்படத்திற்கான திரைக்கதை எழுதும் வேலையில் அட்லி தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் இப்படத்திற்காக அவர் வாங்கப்போகும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இப்படத்தினை இயக்க ரூபாய் 6௦ கோடியை அட்லி சம்பளமாக பெறவிருக்கிறாராம்.
பேச்சுவார்த்தை முடிவில் 5௦ கோடி ரூபாயை அட்லி சம்பளமாக பெற்றாலும் கூட, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் இந்த 11 வருடங்களில் 5 படங்களை மட்டுமே அட்லி இயக்கி இருந்தாலும், அவரின் அசுரவளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.
விரைவில் அல்லு அர்ஜுன் – அட்லி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“புதிய சட்டத்தின் படி கூடவே கூடாது” : தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு!
தேர்தல் பத்திரங்கள்.. எஸ்பிஐ வங்கிக்கு கெடு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?