நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லியோ.
இந்த படத்தில் சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், த்ரிஷா , ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ இன்று (ஜூன் 22) வெளியாகியுள்ளது.
அதன்படி, விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடியுள்ளனர்.
தற்போது விஜய் ரசிகர்கள் ‘நான் ரெடி’ பாடலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில்பாலாஜி வழக்கு: என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டிய தீர்ப்புகள் என்னென்ன?
பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்கும்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்