வாரிசு திரைப்படத்தில் வெளியான தீ தளபதி பாடல் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற வரவா வரவா பாடலின் காப்பி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் வெளியானது. மானசி, நடிகர் விஜய் பாடிய இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதுவரை யூடியூப்பில் 82 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரஞ்சிதமே பாடல் ஹிட்டடித்தது. இந்த பாடல் 1994-ஆம் ஆண்டு வெளியான உளவாளி திரைப்படத்தில் இடம்பெற்ற மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் காப்பி என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இந்தநிலையில், நேற்று வாரிசு திரைப்படத்தில் சிலம்பரன் பாடிய தீ தளபதி பாடல் வெளியானது. பாடல் வெளியாகி 19 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்தப் பாடல் அனிருத் இசையில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற வரவா வரவா பாடலை காப்பியடித்து எடுக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
வாரிசு திரைப்படத்தில் அடுத்தடுத்து வெளியான இரண்டு பாடல்களும் பழைய பாடல்களின் காப்பி என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
செல்வம்
குஜராத் தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி
கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!