திகில் கிளப்பும் அரண்மனை 4 ட்ரெய்லர்..!

சினிமா

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் 3 ஆகிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.

அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், டில்லி கணேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரில் தமன்னாவும் அவரது கணவரும் ஒரு அரண்மனையில் வாழ்ந்து வருகின்றனர்.

திடீரென தமன்னாவின் கணவர் இறந்து போக, அதன் பிறகு தமன்னாவும் தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் தனது தங்கையின் (தமன்னா) மரணம் தற்கொலை அல்ல என்று ஹீரோ சுந்தர்.சி தனது விசாரணையை தொடங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் பல அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. மேலும் “பாக்” என்ற ஒரு பேயை பற்றி அந்த ஊர் மக்களும் பேசிக் கொள்கின்றனர்.

இறுதியில் பாக் என்ற பேயை ஹீரோ எப்படி சமாளித்தார்? தமன்னா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பதே இந்த படத்தின் கதை சுருக்கம்.

முதல் மூன்று பாகங்களை விட இந்த நான்காவது பாகத்தில் பார்வையாளர்களை பயமுறுத்தக்கூடிய திரில்லிங்கான காட்சிகள் அதிகம் இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

மேலும் அதிகமான VFX காட்சிகளும் அரண்மனை 4 படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

குஷ்பு இந்த படத்தை தயாரிக்க, பென்ச்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் A.C.S. அருண் குமார் இந்த படத்தை வழங்குகிறார்.

ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அரண்மனை 2 படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை சீரிஸில் இந்த படமும் மிக பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தி எதிர்ப்பை ’பிஞ்சு போன செருப்பு’ என்ற அண்ணாமலை : வலுக்கும் கண்டனம்!

பன்னீருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!

பாஜக தேர்தல் அறிக்கை குழு : நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொறுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *