ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பிரச்சாரத்தில் இந்தி எதிர்ப்பை பிஞ்சு போன செருப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு பலதரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 29) பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, “1980ல் பேசிய அதே விசயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கு எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என திமுக பேசிக்கொண்டிருக்கிறது.
இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை”என அண்ணாமலை கூறினார்.
இதனையடுத்து, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மொழி, இன உணர்வை தொடர்ந்து கொச்சைப்படுத்துகிறார்!
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொழி உணர்வை, இன உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் இப்போது மட்டுமல்ல, எப்போதும் பேசக்கூடியவர். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் இருந்தபோது, தனக்கு கர்நாடகா தான் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்காது என்று பேசியவர்.
இப்போது தமிழக அரசியலில் உள்ள அண்ணாமலை, ’நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்’ என்ற வகையில் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது”எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தமிழ் மொழி மீது மரியாதை இல்லை!
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவுக்கு தமிழ்நாடு மீதோ, தமிழ் மொழி மீதோ மரியாதை கூட இல்லை.
தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்கவில்லை என பிரதமர் மோடி பேசுகிறார். மறுபுறம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
பிஞ்ச செருப்பு என்று நாங்கள் எதையெல்லாம் தூக்கி எறிந்தோமோ, அதனால் தமிழகம் வளர்ந்துள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு வரி செலுத்துவதால்தான் இந்தியை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேசத்தில் சாலைகள் போடப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சாலை போட வேண்டுமென்றால் இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிஞ்ச செருப்புகளை தூக்கி எறிந்துதான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பன்னீருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!
”அப்போது டிடிவி வீட்டு காவல் நாயாக இருந்தோம். ஆனால்” : ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!
அண்ணாமலைக்கு நன்றிணா, நீங்க இப்படி பேசப் பேசத்தான் கொஞ்ச நஞ்ச நடுநிலை மக்களும் திமுக பக்கம் வருவாங்கனு இப்ப தெரிஞ்சு போச்சு. ஏன்னா, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தப்ப நீங்க பெறந்து இருக்கவே மாட்டிங்க. ஆனா, அந்த தணல் இன்னும் தமிழ்நாட்டுல அப்படியே இருக்கு. பேசுங்க, பேசுங்க, இன்னும் இப்படியே பேசுங்க….