ராஜ் நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 27 பேர் கொண்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை குழுவை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (மார்ச் 30) அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தேர்தல் அறிக்கை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் தற்போது வரை தேர்தல் அறிக்கை வெளியிடாமலே பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்கான ஒரு குழுவை இன்று அதிகாரப்பூர்வமாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை குழுவில் 27 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதேப்போல், இந்த தேர்தல் அறிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக தேர்தல் அறிக்கை குழுவில் தலைவர், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தவிர அனைவரும் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூபேந்திர யாதவ், அர்ஜுன் முண்டா, கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இராணி ஆகிய மத்திய அமைச்சர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, பாஜகவின் மூத்த தலைவர்களான வசுந்திரா ராஜே, சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் முக்கிய நிர்வாகிகளான ரவிசங்கர் பிரசாத், சுசில் குமார் மோடி, கேசவ பிரசாத் மெளரியா உள்ளிட்டவர்களும் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: வைகோ வலியுறுத்தல்!
சித்தார்த் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா..?