தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகப் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. எனவே பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது பிரபலமாகி வருகிறது.
ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால், பெரிய நடிகர்களும் தங்களது படத்தை ரீ ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வருகிற ஏப்ரல் 20-ம் தேதி தளபதி விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கில்லி திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பில்லா, மங்காத்தா போன்ற அஜித் திரைப்படங்களும் ரிலீஸ் ஆகுமா? என்று அஜித் ரசிகர்கள் காத்து கிடந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது வருகிற மே 1-ம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் அன்று ‘மங்காத்தா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப் படுகிறதாம். தல ரசிகர்களுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?, இந்த அறிவிப்பினைப் பார்த்து உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், சினேகா, வைபவ் போன்ற பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
அஜித்குமார் கேரியரில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் என்பதால், ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் வசூல் வேட்டை செய்யும் என்று நம்பப்படுகிறது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு!
தனுஷின் நெக்ஸ்ட் திரைப்படம் – இளம் இயக்குனருக்கு அடிச்சது லக்…!
96 படத்தில் வந்த மாணவியா இது?.. ஹீரோயின் மாறி ஆகிட்டாங்களே… லேட்டஸ்ட் Photo வைரல்..!