2015 ஆம் ஆண்டு ‘கிரகணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை.
அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண், ரைசாவை வைத்து ‘பியார் பிரேமா காதல் ‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
படமும் அவருக்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. தற்பொழுது கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஸ்டார் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தநிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் நடிகர் தனுஷை இயக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.
தனுஷிற்கு கதை மிகவும் பிடித்து விட்டதாகவும், நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மதுரையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் பெரிய பொருட்செலவில் உருவாக இருப்பதால், சரியான தயாரிப்பாளருக்கு காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
தற்பொழுது தனுஷ் ‘ராயன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி போன்ற பலர் நடித்துள்ளனர்.
வடசென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில், தனுஷ் மீண்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: மூட்டுவலி உள்ளவர்களின் கவனத்துக்கு…
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தடை: என்ன காரணம்?
எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதி மாறன் எச்சரிக்கை!
பியூட்டி டிப்ஸ்: பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே வைத்தியம்!
96 படத்தில் வந்த மாணவியா இது?.. ஹீரோயின் மாறி ஆகிட்டாங்களே… லேட்டஸ்ட் Photo வைரல்..!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!