பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த திரைப்படம் ’96’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், பல விருதுகளையும் அள்ளியது.
பல வருடங்கள் கழித்து பள்ளி நண்பர்கள் ஒன்று சேர்கின்றனர். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
இதில் திரிஷாவின் தோழியாக, சிறுவயது தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்தவர் நியதி. இவர் நட்சத்திர தம்பதியான சேத்தன்-தேவதர்ஷினியின் மகள் ஆவார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘விடாது கருப்பு’ என்ற தொடரில் இணைந்து நடித்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் இருவரும் நடித்து வருகின்றனர்.
கடைசியாக சேத்தன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தேவதர்ஷினி கேரளா ஸ்டோரி, பேமிலி மேன் 2 போன்ற திரைப்படங்களில் மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த தம்பதியினரின் மகள் நியதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 96 படத்தில் பள்ளி மாணவியாக நடித்த இவர் தற்பொழுது வளர்ந்து ஹீரோயின்களுக்கே டப் தரும் அழகில் மின்னுகிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் அம்மாவைப் போலவே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சீக்கிரமே இவரை ஹீரோயினாகப் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவின் கொள்கையே இதுதான் : எடப்பாடி பழனிசாமி தாக்கு!
பெண்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓட்டு யாருக்கு அதிகம்? மெகா சர்வே ரிசல்ட்!
“தமிழகத்தில் லாட்டரி புழக்கம் அதிகரிப்பு”: பிரேமலதா குற்றச்சாட்டு!
தோனி, கோலி ஃபார்முலா… கெய்ல் சாதனையை முறியடித்த பட்லர்