லியோ படத்தின் நா ரெடி பாடல் போதை பழக்கத்தையும் ரவுடிசத்தையும் ஊக்குவிப்பதாக புகார் எழுந்த நிலையில் எச்சரிக்கை வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ‘நா ரெடி’ என்ற பாடலும் வெளியானது.
விஜய்யின் குரலில் வெளியான இந்த பாடல் 30 கோடிக்கும் அதிமான பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நா ரெடி பாடல் போதை பழக்கம் மற்றும் ரவுடிசத்தை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே பாடலுக்குத் தடை கோரியும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நா ரெடி பாடலின் லிரிக்கல் வீடியோவில் புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்” என்ற எச்சரிக்கை வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.
மோனிஷா
டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் கடிதம் காரணமா?
சிதம்பரம் நடராஜர் கோவில்: கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி!