13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரும். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பருக்கள் வந்து மறையும்.
சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல், மனப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இன்மை, பொடுகுத் தொல்லை, காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பருக்கள் ஏற்படும்.
பருக்களை வீட்டு வைத்தியத்தில் தடுக்க… முகத்தைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்துக்கு எனத் தனியாக ஒரு துண்டைப் பயன்படுத்த வேண்டும்.
கொழுப்பு, எண்ணெய் உணவுகளுக்கு ‘தடா’ போடுவதன் மூலமும் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
மேலும், கொதிக்கும் நீரில் கொழுந்து வேப்பிலையைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு, துண்டால் முகத்தை ஒற்றி எடுத்து, குளிர்ந்த நீரால் கழுவலாம்.
புதினா, துளசி, வேப்பிலை, தலா நான்கு இலைகளை எடுத்து, இதனுடன் சிறிது மரிக்கொழுந்து சேர்த்து, சாறாக அரைத்து, கடலை மாவுடன் கலந்துகொள்ளவும். முகம், மூக்கு ஒரங்களில் இந்தச் சாற்றைப் பூசி, 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் கழுவலாம்.
ரோஜா இதழ்களை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். இந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, அடிக்கடி எடுத்து முகம் கழுவலாம். பருக்கள் வராது. முகத்திலும் பொலிவு கூடும்.
பயத்த மாவு ஒரு டீஸ்பூன், எலுமிச்சை இலை இரண்டு, வேப்பிலை ஒன்று, கஸ்தூரி மஞ்சள் அரை டீஸ்பூன் ஆகியவற்றை அரைத்து, பன்னீருடன் கலந்து முகத்தில் பூசலாம்.
வெள்ளரிச் சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை சம அளவில் எடுத்து, அதில் பார்லி பவுடர், முல்தானி மிட்டி தலா 2 ஸ்பூன் கலந்து, மிக்ஸியில் அரைத்து, பருக்கள் வந்த இடங்களில் அடர்த்தியாகப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பருக்கள் மறையும். வராமலும், பரவாமலும் தடுக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : தஹி பிரெட் டிக்கி
மோடி சுட்ட வடையை விட டிமாண்டா? – அப்டேட் குமாரு
இளையராஜா குறித்து விமர்சனம்: வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை!
டிஜிட்டல் திண்ணை: எங்கே சென்றார் எடப்பாடி? பாதி வழியில் திரும்பிய நிர்வாகிகள்!