ஹெல்த் டிப்ஸ்: கோடையிலும் ஜலதோஷம்… காரணம் என்ன?

டிரெண்டிங்

சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், சிலருக்குக் கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். இதற்கு என்ன காரணம்… இதைத் தவிர்க்க என்ன வழி?

ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள்தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் ஜலதோஷத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு தொற்றுகள் தவிர்த்து, அரிதாக சிலருக்கு பூஞ்சைத் தொற்று (Fungal infection) காரணமாகவும் சளி பிடிக்கலாம்.

வைரஸ்களில் லட்சக்கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் கோடைக்காலத்தில் சில வைரஸ்களும், குளிர்காலத்தில் சில வைரஸ்களும் ஆக்டிவ்வாக இருக்கும். கோடைக்காலத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் வைரஸ்கள்தான் கோடையிலும் சளி, இருமலை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, என்டெரோ வைரஸ்கள் ( Enterovirus) கோடையில் ஆக்டிவ்வாக இருப்பதால், அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவே, குளிர் காலத்தில் ரைனோ வைரஸ்கள் (Rhinovirus) ஆக்டிவ்வாக இருப்பதால், அந்த சீசனில் அவை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கோடையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  கோடையில் ஏற்படும் இத்தகைய வைரஸ் தொற்றானது அதிகபட்சமாக மூன்று- நான்கு நாட்கள் இருந்துவிட்டு, தானாகவே சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்துக்கொள்வதுதான் இதிலிருந்து விடுபடும் ஒரே வழி. சளி, இருமல் வந்தாலே உடனே ஆன்டிபயாடிக் மருந்துகளை நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஆன்டிபயாடிக்ஸ் என்பவை பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்த வேண்டியவை. தேவையில்லாமல் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : தஹி பிரெட் டிக்கி

மோடி சுட்ட வடையை விட டிமாண்டா? – அப்டேட் குமாரு

இளையராஜா குறித்து விமர்சனம்: வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை!

பிளாக் ஷீப் ராம் நிஷாந்த்தை பாராட்டிய சமுத்திரக்கனி: ஏன் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *