மே தினத்தில் மகிழ்ச்சி செய்தி… சிலிண்டர் விலை குறைந்தது!

Published On:

| By christopher

Good news on May Day...Cylinder price reduced!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி இன்று (மே 1) சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைந்து ரூ.1,930ல் இருந்து ரூ.1,911க்கு விற்பனையாகிறது.

அதே வேளையில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஹெல்த் டிப்ஸ்: கோடையிலும் ஜலதோஷம்… காரணம் என்ன?

பியூட்டி டிப்ஸ்: பருக்களைத் தடுக்க சிம்பிள் தீர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.