நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் எந்த வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அவரது கணவர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.
டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள “கனெக்ட்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள், சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் திரையிடப்பட்டது.

படத்தை பார்க்க படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகர் வினய் உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் விக்னேஷ் சிவன், “படம் அருமையாக வந்துள்ளது.
இடைவெளி இல்லாமல் ஒரு புதுமுயற்சியை இதில் கையாண்டுள்ளோம். படத்தில் உள்ள அமானுஷ்ய காட்சி அமைப்புகள் இயக்குனரின் கற்பனையில் திகிலூட்டும் வகையில் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
படத்தில் நயன்தாரா அம்மாவாக நடித்துள்ளார், நிஜத்தில் குழந்தைகள் எப்படி பார்த்து கொள்கின்றார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நன்றாக பார்த்து கொள்கின்றார் என்று பதிலளித்தார்.
படத்தில் இடைவேளை இல்லாததால் படம் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு, “எந்த சிக்கலும் இல்லை, ரசிகர்கள் இடைவேளையில் வாங்க கூடியதை முன் கூட்டியே வாங்கி செல்ல அறிவுறுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
மற்றபடி 300 க்கும் மேற்பட்ட அரங்கில் கனெக்ட் வெளியாகிறது” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
புதிய வருவாய்த்துறை கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்
குரூப் 4 தேர்வு : முதல்வருக்கு திருமா கோரிக்கை!