ஐயோ போச்சே : அப்டேட் குமாரு
இன்னைக்கு டீக்கடைக்கு வந்த அதிமுக காரரு கணேசன், ”ஓடிட்டு இருந்த பஸ்ஸுல இருந்து தனியா படிக்கட்டு உடைஞ்சி விழுந்திச்சி அந்த வீடியோவ யாரும் பாத்தியலா?”னு கேட்டாப்ல.
ஒருத்தருக்கும் புரில.. எங்கே நடந்துச்சி, என்னாச்சி, யாருக்கும் அடிபட்டிருக்கானு கேட்க… அவரோ கூலா சிரிச்சிக்கிட்டே யூடிப்ல இருந்த விடியோவ எடுத்து எல்லோருக்கும் காமிச்சாப்ல.
ஆனா பாருங்க, அந்த வீடியோல 2 நிமிசத்துக்கு ஃப்ரீ பஸ்ஸால கெடச்ச பலன்கள பத்தி அதுல போற பொம்பளைங்க பேசுற விளம்பரம் ஓடிட்டு இருக்கு….
கடைசில கணேசனே கடுப்பாகி… மொபைல தூக்கி போட்டுட்டு ‘ஐயோ போச்சே’னு சோகமா கெளம்பிட்டாப்ல…
எந்த வீடியோ போட்டாலும் எதிர்க்கட்சி மாதிரி யு ட்யூப் விளம்பரத்தைப் போடுது… என்னனு சொல்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
Mannar & company™????
தேர்தல், கிரிக்கெட் இரண்டும் ஒண்ணுதான்..
அது பார்க்கும்போது ஜாலியாருக்கும், நல்லாருக்கும்.
ஆனா யார் ஜெயிச்சாலும் நமக்கு ஒண்ணும் கிடைக்கபோறதில்லை!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
குறைஞ்ச டைம்ல வெயிட் குறைஞ்சவங்களை பார்த்து வெயிட் குறைக்கறதுக்கான முயற்சி கூட பண்ணாதவங்க சொல்ற ஒரு விஷயம்..
‘இவ்வளவு சீக்கிரமா வெயிட் குறைக்கறது உடம்புக்கு நல்லதில்லை, எதோ குறுக்கு வழி யூஸ் பண்ணிருப்பாங்களா இருக்கும்..’
கிரீஸ் டப்பா
போன வாரம் வேலைக்கு போன களைப்பு போகட்டும்னு சனிக்கிழமை தூங்கியே கழிஞ்சுது,
இந்த வாரம் வேலைக்கு போக தயாராவோம்னு ஞாயித்துகிழமை தூங்கியே கழிஞ்சுது..
இப்போ அதுக்குள்ள மறுபடியும் திங்கட்கிழமை வந்துருச்சி!
#Weekend
வசந்த்
நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டு போட்டு அனுப்பப் போவது எம்.பியை அல்ல மத்திய அமைச்சரை – இயக்குநர் சுந்தர் சி
என்னப்பா அரண்மனை -4க்கு ப்ரோமோஷனா?
கோழியின் கிறுக்கல்!!
‘RCB பாவம், ரொம்ப கஷ்டப்படுறாங்க’ன்னு நம்மை நினைக்க வைத்து,
மேட்ச் பார்க்க வைத்து பணம் சம்பாதிப்பது தான் அவர்கள் ‘Game Plan’ போல!!
Kirachand
தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தருவோம்! – பிரதமர் மோடி
அதெல்லாம் இருக்கட்டும்… தமிழ் மொழியை தேசிய மொழி ஆக்க முடியுமான்னு முதல்ல சொல்லுங்க!
Kirachand
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை தடுக்க பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறவில்லை! – எதிர்க்கட்சிகள்
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்னு ஒன்னு இருக்கு,
விலைவாசி எல்லாம் கூடி போச்சுங்கிற நினப்பு அவங்களுக்கு இருந்தாத்தானே
அதைப் பத்தி எல்லாம் சொல்வாங்க…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!
மின்னம்பலம் சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?