TN ex Minister Indira Kumari passed away!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!

அரசியல்

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல் நலக்குறைவால் இன்று (ஏப்ரல் 15) காலமானார். அவருக்கு வயது 74.

1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு ஏம்.எல்.ஏ ஆனார்..

தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரை சமூக நலத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

பின்னர் 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவர், அக்கட்சியின் மாநில இலக்கிய அணி தலைவராக பொறுப்பு வகித்தார்.

இதற்கிடையே அதிமுக ஆட்சியில் இந்திரகுமாரி அமைச்சராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக 1997ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இந்திராகுமாரிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திரகுமாரி சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இந்திரகுமாரியின் உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதி சடங்கு நாளை பெசன்ட்நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம்” : கார்கே உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *