யுபிஐ பேமண்ட் என்றாலே அனைவரும் கேட்பது கூகுள் பேவா? அல்லது போன் பேவா? என்றுதான். தற்போது இதில் ஜியோ நிறுவனமும் புதிதாக களமிறங்க திட்டமிட்டுள்ளது.
விரைவில் தனது ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்சை அந்நிறுவனம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தவுள்ளது.
குறுகிய காலத்திற்குள் தனது பேமெண்ட் சேவையை தொடங்கவுள்ள ஜியோ, அடுத்த எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள் ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்சின் விரிவான பைலட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தொடக்கமாக லக்னோ, இந்தூர் மற்றும் ஜெய்ப்பூரில் சோதனை செய்யப்படுகிறது. இதில் வெற்றி பெற்றதும் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்த இருக்கிறது. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் தங்களுக்கென தனி சவுண்ட் பாக்ஸ் சேவை வைத்துள்ளது.
இதேபோல ஜியோ பே களமிறங்கும் போது தங்களுக்கான சவுண்ட் பாக்ஸ் சேவையை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த ஜியோ பேமெண்ட் சவுண்ட் பாக்ஸ் விலை பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
விலை விவரம் தெரிய வந்தாலும் அது விற்பனைக்கு விற்பனை மாறுபடும். வாங்குபவரை பொறுத்து விலை கூடவும், குறையவும் வாய்ப்புகள் உள்ளன.
தொலைத்தொடர்பு துறை, மொபைல் என தொடங்கிய அனைத்திலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள ஜியோ தற்போது யுபிஐ சேவையிலும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொய் செய்திகளை பரப்பாதீங்க… வரலட்சுமி சரத்குமார் காட்டம்!
“எடப்பாடி அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்”: அண்ணாமலை தாக்கு!